search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழு கொள்ளளவு"

    • பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி செல்கிறது.

    அதேபோல காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    மழையின் காரணமாக உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல்சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 381- ஏரிகள் உள்ளன. இதில் ஏரிகள் முழுவதும் நிரம்பியது. 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, உத்திரமேரூர், மணிமங்கலம், போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தென்காசியை அடுத்துள்ள பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள நாகல் குளத்தில் தண்ணீர் வந்து நிரம்பியதால் முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. நாகல்குளம் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களை சார்ந்த விவசாயிகள் அப்பகுதியில் வேளாண்மை பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

    • பெரியகுளம் கண்மாயில் வேகமாக குறையும் நீர்மட்டத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய், வீராக சமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த இரு கண்மாயை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் தென்னை, நெல் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கோடை கால நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கி்றது. அறுவடை முடித்தவர்கள் முதல் போக நெல் சாகுபடி செய்வதற்காக விவசாய பணியினை தொடங்கு வதற்கு வயல்களை தயார் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள சூழ்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் குறைந்து வருகிறது. கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது. தற்போது முதல் போக நெல் நடவு செய்வதற்காக நெல் நாற்றங்கால் பாவ போதுமான தண்ணீர் கிணறுகளில் இருப்பதால் நாற்றங்கால் பணியை தொடங்கி உள்ளோம்.

    மேலும் கண்மாயில் தற்போது 20 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டால் நீர்மட்டம் வெகு வாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை யுடன் கூறினர்.

    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையின் இன்றைய நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #Idukkidam
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி, செருத்தோனி, குலமாவு ஆகிய நீர்தேக்கங்களுக்கான இடுக்கி அணைக்கட்டு உள்ளது. இந்த நீர்தேக்கத்தையொட்டி இடுக்கி புனல் மின்சார உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் கேரளாவின் பல பகுதிகளில் பெய்த பெருமழையால் இடுக்கி நீர்தேக்கத்தில் அதிகமான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கட்டு பகுதிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2403 அடியாக உள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,394.72 அடியாக இருந்தது. நீர்மட்டம் 2395 அடியாகும்போது, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும். 2397 அடியாக உயரும்பட்சத்தில் ஓரிரு மணி நேரத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கு திறந்து விடப்படும் நீர் அருகாமையில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும். இந்நிலையில், வெள்ளத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் இடுக்கியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் உள்ள தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ராணுவம், விமானப்படை மற்றும் சிறியரக படகுகளுடன் கப்பற்படையினரும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு இடுக்கி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் 26 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது. #Idukkidam  #Idukkidamfulllevel #Idukkidamalert 
    ×